அரசு அனுமதி மறுத்தபோதிலும் சட்டப்போராட்டம் நடத்தி வென்று மறைந்த திமுக தலைவர் கலைஞரை மெரினாவில் அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்தனர். நள்ளிரவிலும் கலைஞர் சமாதியை காண தொண்டர்கள் வந்தவண்ணம் உள்ளனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதியைச்சுற்றிலும் ஓய்வெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கலைஞர் சமாதியை காண நள்ளிரவு என்றும் பாராமல் வந்த தொண்டர்கள், எம்.ஜி.ஆர். சமாதியிலும், ஜெயலலிதா சமாதியிலும் லைட் எரியுது . ஆனால், அண்ணா சமாதியில் சில லைட் தவிர மற்ற லைட்டை மாநகராட்சி ஆப் செய்து வைத்திருக்கிறது. இதனால் கலைஞர் சமாதியைச்சுற்றிலும் இருட்டாக உள்ளது. இதனால் அண்ணா சமாதியில் இருந்து கலைஞர் சமாதிக்கு செல்ல பொதுமக்கள் இருட்டில் அவதியுறுகின்றனர். தேசத்தின் மூத்த தலைவர் என்ற முறையில் இந்த மாநகராட்சி லைட் போட்டிருக்கலாம் என்று வேதனையை தெரிவிக்கின்றனர்.