Skip to main content

11.50 லட்சம் மதிப்பிலான போலி மதுபானங்கள் பறிமுதல்

Published on 01/12/2022 | Edited on 02/12/2022

 

w

 

தமிழக மதுபான வகைகளைப் புதுச்சேரியில் போலியாகத் தயாரித்து தமிழகத்திற்குக் கடத்தி வருவதாகப் புதுச்சேரி கலால் துறைக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து கலால் துறை துணை ஆணையர் சுதாகர் உத்தரவின் பேரில், வட்டாட்சியர் சிலம்பரசன் மற்றும் கலால் துறை ஆய்வாளர் ரமேஷ், உதவி ஆய்வாளர் பாஸ்கரன் ஒருங்கிணைப்பில் தனிப்படை அமைக்கப்பட்டு புதுச்சேரியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது.

 

இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் சேதராப்பட்டு கரசூர் பிடாரி அம்மன் கோவில் அருகில் சந்தேகத்திற்கு உரிய வகையில் ஈச்சர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்ததை அறிந்த கலால் துறையினர் அதனை சோதனை செய்ததில் தவிடு மூட்டைக்கு மத்தியில் போலியாகத் தயாரிக்கப்பட்ட ரூபாய் 11 லட்சத்து 50  ஆயிரம்  மதிப்புடைய தமிழக மதுபான வகை பாட்டில்கள் 153 பெட்டிகளில் 7344 மது புட்டிகள் இருந்தது. 

 

இந்த மது பாட்டில்கள் புதுச்சேரியிலிருந்து தமிழகத்துக்குக் கடத்த முயற்சி செய்தது தெரிய வந்தது. அதையடுத்து மதுபான பெட்டிகளையும், லாரியையும் பறிமுதல் செய்த கலால் காவல்துறையினர் மதுபானங்களைக் கடத்த முயன்ற வண்டி உரிமையாளர் மற்றும் அதில் தொடர்புடையவர்களைக் கைது செய்து, தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்