
பிரபலமான நடிகர்கள், நடிகைகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் என ஒவ்வொருவருடைய பெயரிலும் போலியான இணையப் பக்கங்களையும், சமூக வலைதளங்களில் ஒவ்வொருவருடைய பெயரிலும் தனி கணக்குகளையும் திறந்து அதன்மூலம் உதவி செய்ய வலியுறுத்தும் நூதன கொள்ளை தற்போது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், திருச்சியில் காவல் ஆய்வாளராக பணியாற்றிய உமாசங்கர் என்ற ஆய்வாளரின் பெயரில் முகநூல் பக்கத்தில் போலி கணக்கு துவங்கப்பட்டு, தனக்கு உதவி செய்திட வேண்டும் என்று வலியுறுத்தி பலரிடம் பணம் கேட்டு மோசடி செய்யும் கும்பல் தன்னுடைய வேலையைத் துவங்கியுள்ளது.
தன்னுடைய பெயரில் போலி முகநூல் துவங்கப்பட்டதை அறிந்து காவல் ஆய்வாளர் உமா ஷங்கர், உடனடியாக தன்னுடைய அங்கீகரிக்கப்பட்ட முகநூல் பக்கத்திலிருந்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘யாரும் என்னுடைய கணக்கிற்கு பணம் அனுப்ப வேண்டாம். என்னுடைய பெயரில் போலியான முகநூல் பக்கம் துவங்கப்பட்டுள்ளது’ என்றொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் இந்தப் போலி முகநூல் பக்கம் குறித்த விசாரணையை சைபர் க்ரைம் காவல்துறை தற்போது துவங்கியுள்ளது.