Skip to main content

போலி கிரிப்டோ... விழிப்புணர்வு வழங்க வேண்டிய காவலர்களே இப்படி ஏமாறலாமா?

Published on 05/05/2022 | Edited on 05/05/2022

 

CRYPTO

 

போலி கிரிப்டோகரன்சி நிறுவனங்களில் முதலீடு செய்த காவல் துறையை சேர்ந்த இரண்டு காவலர்கள் பணத்தை இழந்தது  தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

 

சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், காவல்துறையினர் தீய பழக்க வழக்கங்களிலிருந்து விலகுவது குறித்த சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'பிட் ஃபண்ட் மைன் இன்வெஸ்ட்மெண்ட் கம்பனி, ஆன்லைன் பிட்காயின் டிரேடிங் ஆகிய நிறுவனங்கள் பெயரில் பல தவணைகளாக பணத்தை கட்டி இரண்டு காவலர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டிய காவலர்களே இதுபோன்ற ஆசை அறிவிப்புகளை நம்பி பணத்தை இழந்துள்ளனர். காவலர்கள் தங்களது சேமிப்புகளை தரமான வங்கி மற்றும் முதலீடுகளில் செலுத்தி ஆதாயங்களைப் பெற வேண்டுமே தவிர இதுபோன்ற தீய பழக்கவழக்கங்களில் ஈடுபட்டு ஏமாறக்கூடாது' என தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்