Published on 26/05/2020 | Edited on 26/05/2020
புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊருக்கு நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது, மத்திய, மாநில அரசுகளின் தோல்வியையே காட்டுகிறது என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சனைகள் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டதில், புலம்பெயர் தொழிலார்களுக்கு நடந்த இந்த இன்னல்கள் குறித்து மே 28ஆம் தேதிக்குள் மத்திய அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அப்போது கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்க காலத்தில், புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து செல்லும் நிலை உருவானது மத்திய, மாநில அரசுகளின் தோல்வியையே காட்டுகிறது என கூறியது.