Skip to main content

மலேசியாவில் இருந்து தேனி வந்த முகநூல் காதலி... நேரில் குண்டாக இருந்ததால் நிராகரித்த காதலன் மீது கூலிப்படையை ஏவ முயற்சி! 

Published on 30/11/2019 | Edited on 30/11/2019

ஃபேஸ்புக்கில் உருகி உருகி காதலித்த காதலி நேரில் குண்டாக இருந்ததால் வேண்டாம் என்று நிராகரித்த காதலனை காதலி கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தேனியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

facebook love incident in theni..

 

தேனி மாவட்டம் காட்டுநாயக்கன்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மின் பொறியாளரான அசோக்குமார். இவர் முகநூல் மூலம் தோழியாக அறிமுகமான மலேசியாவைச் சேர்ந்த அமுதா அருணாச்சலம் என்ற பெண்ணிடம் காதல் வயப்பட்டு உள்ளார். முகப்புத்தகத்தில் காதலியான அமுதா அருணாச்சலம் அனுப்பிய பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை மட்டுமே பார்த்திருந்த காதலன் அசோக்குமார் நான் உன்னை நேரில் பார்க்க ஆசைப்படுகிறேன் என அவருடைய விருப்பத்தை அவரிடம் தெரிவித்துள்ளார். 

 

facebook love incident in theni..


அதற்கேற்றார்போல் காதலியான அமுதா அருணாச்சலமும் தான் விரைவில் தேனி வர இருப்பதாகவும், நேரில் நாம் சந்திக்கலாம் என்றும் அசோக்குமாரிடம் கூறியுள்ளார். அதன்படி இரண்டு மாதங்களுக்கு முன்பு தேனிக்கு வந்துள்ளார் அமுதா அருணாச்சலம்.  மலேசியாவிலிருந்து தன்னை பார்க்க வந்த முகப்புத்தக காதலியை ஆசை ஆசையாக பார்க்க புறப்பட்டு சென்ற அசோக்குமாருக்கு அங்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

 

facebook love incident in theni..


முகநூலில் போட்டோஷாப் செய்த புகைப்படங்களை பார்த்த அசோக்குமார் முதன்முறையாக நேரில் வந்திருந்த தனது முகப்புத்தக காதலியை பார்த்து அதிர்ந்து போனார். ஏனெனில் தன்னை சொக்கவைக்கும் அழகில் இருப்பார் என்று நம்பி சென்ற அசோக்குமாருக்கு அங்கே ஏராளமான நகைகளை கழுத்தில் அணிந்தபடி குண்டாக, உடல் பருமனாக இருந்த காதலியை கண்டு மிரண்டு போன காதலன் அசோக்குமார் எனக்கு உன்னை பிடிக்கவில்லை என்றும் கூறி நழுவியுள்ளார். அழகை எதிர்பார்க்காமல் நல்ல மனதை மட்டும் எதிர்பார்த்து மலேசியாவிலிருந்து கழுத்து நிறைய தங்க நகைகளைப் போட்டுக்கொண்டு கடல் கடந்து வந்த அமுதா அருணாச்சலம் திருமணம் செய்தால் உன்னை தான் திருமணம் செய்வேன் என்று உறுதியாக அவரிடம் கூறியுள்ளார்.

ஆனால் தன்னால் முடியாது என்று அவருடைய வேண்டுகோளை நிராகரித்த அசோக்குமார் அங்கிருந்து புறப்பட்டு வந்துவிட்டார். ஏமாற்றத்துடன் திரும்பிய அந்தப் பெண் மலேசியாவில் தற்கொலை செய்துகொண்டதாக அவருடைய சகோதரி போனில் அசோக்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். என் சகோதரி தற்கொலை செய்து கொண்டதற்கு நீதான் காரணம் என அசோக்குமாரிடம் அந்தப் பெண்ணின் சகோதரி கூற,  அசோக்குமார் கைகால் ஓடாமல் என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறி உள்ளார். என்னை உண்மையிலேயே மன்னித்துவிடுங்கள் என்று கதறிய அசோக்குமாரிடம் நீ நேரில் மன்னிப்பு கேட்டால்தான் நான் ஏற்றுக் கொள்வேன் என்று கூறி நான் தேனிக்கு வருகிறேன் என்னிடம் வந்து மன்னிப்பு கேள் எனக் கூறியுள்ளார்.

 

facebook love incident in theni..


இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட காதலன் அசோக்குமார் முகநூல் காதலியின் சகோதரி வரச்சொன்ன ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு சென்று பார்த்தால் மீண்டும் ஒரு அதிர்ச்சி அசோக்குமாருக்கு காத்திருந்தது. முகநூல் காதலியின் சகோதரி போல பேசியதும் காதலியான அமுதா அருணாச்சலம் என்பதுதான் அந்த அதிர்ச்சி. இதனால் வெறுப்படைந்த அசோக்குமார் என்னை ஏமாற்ற தற்கொலை நாடகமாடி விட்டாயே என்று ஆத்திரமடைந்து இனி உன்னிடம் பேச மாட்டேன் என்று அங்கிருந்து புறப்பட்டு வந்ததோடு முகநூல் பக்கத்தையும் டெலிட் செய்துள்ளார்.

அதன்பின் மும்பையில் அசோக்குமார் பணிபுரியும் இடத்திற்கு சென்ற அந்த முகநூல் காதலி நானும் அசோக்கும் காதலித்தோம் என அங்கே உள்ளவர்கள் மத்தியில் அவர்களுடைய அந்தரங்கத்தை பற்றியெல்லாம் வெளிப்படுத்தியதால் அசோக்குமாரின் வேலையும் பறிபோனது. இப்படி தொடர்ச்சியாக சம்பவங்கள் நடந்து கொண்டிருக்க ஒருகட்டத்தில் அசோக்குமாரின் வீட்டிற்கு சென்ற அந்தப் பெண் அசோக்குமாரின் வீட்டில் உள்ளவர்களிடம் மாப்பிள்ளை கேட்டுள்ளார். அசோக்குமாரின் பெற்றோர்களும் இதற்கு சம்மதிக்கவில்லை அதனால் அசோக்குமாரின் வீட்டிலேயே தற்கொலை செய்து கொள்வேன் என்று அடம்பிடித்ததால் அசோக்குமார் இதுகுறித்து தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

facebook love incident in theni..


அந்தப்பெண்ணிடம் நடத்தப்பட்ட போலீசாரின் விசாரணையில் அந்த பெண்ணின் உண்மையான பெயர் விக்னேஸ்வரி என தெரியவந்தது. அதோடு மட்டுமல்லாமல் அசோக்குமாரிடம் விஜி, அமுதா, கனகா, வசந்தி, விக்னேஷ்வரி, கவிதா அருணாச்சலம், பவித்ரா எனப் பல்வேறு போலியான கணக்குகளில் இருந்து முகநூலில் சாட்டிங் செய்து கொண்டிருப்பதும் விக்னேஷ்வரி என்பது தெரியவந்தது.

இப்படி எல்லா பிரச்சனைகளையும் தாண்டி இருவருக்கும் சமாதானம் பேசி வீட்டிற்கு செல்லும்படி அனுப்பிவைத்தனர் போலீசார். இத்தனை பிரச்சனைகளையும் தாண்டி அசோக்குமார் சென்னையில் உள்ள நிறுவனம் ஒன்றுக்கு பணிக்காக சென்றுவிட்டார். இந்தநிலையில் அசோக்குமாரை தேடி தேனி முழுவதும் ஆட்டோவில் சுற்றிய விக்னேஷ்வரியிடம்  ஆட்டோ ஓட்டுனர் மதுரையில் கூலிப்படை ஒன்று உள்ளதாகவும், அவர்களிடம் பணம் கொடுத்தால் அசோக்குமாரை கடத்திவந்து திருமணம் செய்துவைப்பார்கள் எனக்கூறி மதுரையை சேர்ந்த அன்பரசு என்பவரின் மொபைல் எண்ணை கொடுத்துள்ளார்.

 

facebook love incident in theni..


அந்த மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்ட விக்னேஷ்வரி அசோக்குமாரை கடத்தி வந்து எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் இல்லையென்றால் அவனை கொன்று விட வேண்டும் எனக் கட்டளையிட்டு கூலிப்படைக்கு ஒரு லட்சம் ரூபாய் தொகையைக் கொடுத்துள்ளார். இந்நிலையில் வார இறுதி நாட்களில் விடுமுறையில் வீட்டுக்கு வரும் அசோக்குமாரை தூக்கிச்செல்லும் திட்டத்துடன் கூலிப்படையை சேர்ந்த நால்வர் சுற்றித்திரிந்துள்ளனர். அந்த நேரத்தில் போலீசில் சிக்கி கொண்ட அந்த நான்கு பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் விக்னேஸ்வரியின் திட்டங்கள் வெளியே வந்தது.

சரியான நேரத்தில் போலீசாரால் இந்த கும்பல் கைது செய்யப்படாமல் இருந்திருந்தால் ஒருவேளை அசோக்குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்கின்றனர் காவல்துறையினர். இந்நிலையில் விக்னேஸ்வரியை போலீசார் கைது செய்வதற்காக தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்