குழந்தையை காண வரும் முன்னாள் கணவருக்கு மனைவி தேநீர் கொடுத்து உபசரிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு ரத்து செய்துள்ளது.
திருமணமாகி கருத்து வேறுபாடால் மனைவியிடம் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்த கணவர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் விவகாரத்துக்கு பிறகு குழந்தையை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட கோரிக்கை வைத்திருந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன், அனுமதி அளித்ததோடு, குழந்தையைக் காண வரும் முன்னாள் கணவருக்கு தேநீர் கொடுத்து உபசரிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து முன்னாள் மனைவி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தனி நீதிபதி கொடுத்த உத்தரவை ரத்து செய்தனர்.