Published on 09/10/2018 | Edited on 09/10/2018

தமிழகத்தில் மூத்த பத்திரிகையாளர், நக்கீரன் இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து இந்த கைது நடவடிக்கைக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக ஆளுநர் தன்னை ஏதோ ராஜராஜ சோழன் போல, பேரரசர் போல நினைத்துக் கொள்கிறார். நிர்மலா தேவி குறித்து விசாரிக்க அவர் போட்ட ஒரு நபர் கமிஷன் என்ன ஆனது.. இதைக் கேட்டால் கைது செய்வதா என்று தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.