Published on 04/02/2019 | Edited on 04/02/2019
இன்று தை மாத அமாவாசையை தொடர்ந்து அதுவும் இந்த அமாவாசை அறுபது ஆண்டுகளுக்கு பிறகு வருகிற மகாளய அமாவாசை என கூறப்படுகிறது. இதனால் மக்கள் கோயில் மற்றும் நீர் நிலைகளுக்குச் சென்று நீராடுவதும், முன்னோர்களுக்கு தர்பனம் என்கிற பூஜை செய்வதும் தமிழகம் முழுக்க நடை பெற்றது.
வடக்கே காசி என்றால் தெற்கே தென் கைலாயம் என மக்களால் அழைக்கப்படுவது ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள கூடுதுறை தான்.
காவிரி மற்றும் பவானி இரு நதிகளும் கூடுமிடம் இந்த கூடுதுறை இன்று இங்கு அதிகாலை முதல் மாலை வரை ஆயிரக்கணக்கான மக்கள் காவிரியில் குளித்து தங்களின் முன்னோர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். இதே போல் ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி, கொடிவேரி, பவானிசாகர் என பல ஊர்களில் உள்ள ஆற்று நீரில் குளித்து பரிகார பூஜைகள் செய்தனர்.