ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடுகிறது. அதன் வேட்பாளராக அக்கட்சியின் மாநில பொருளாளர் கணேசமூர்த்தி அறிவிக் கப்பட்டுள்ளார்.
அதிமுகவில் காங்கேயம் நகர செயலாளர் வெங்கு என்கிற மணிமாறனும், களம் இறங்கியுள்ளார். இந்நிலையில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. சுயேட்சை சின்னத்தில்தான் கணேசமூர்த்தி நிறுத்தப் படுகிறார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நேற்று அறிவித்துவிட்டார்.
இந்த நிலையில் கணேசமூர்த்தி ஒரு சுயேட்சை வேட்பாளாகவே தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. கணேசமுர்த்திக்கு சுயேட்சைகளுக்கு வழங்கப்படும் சின்னமே கொடுக்கப்படுகிறது. ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சி வேட்பாளர் பிரதான சின்னத்தில் போட்டிடாததால், கணேசமூர்த்தி பெயர்கொண்ட குறைந்த பட்சம் 10 பேரையாவது வேட்பாளராக போட்டியிட வைப்பது என்றும், கணேச மூர்த்தி பெயர்கொண்ட நபருக்கு 10 லட்சம் சன்மானம் கொடுக்கவும் ஈரோடு அதிமுக முன்வந்துள்ளதாகவும், அதற்காக கணேசமூர்த்திகளை அதிமுக் அதேடுவதாகவும் தகவல். இது மதிமுக கணேசமூர்த்திக்கு பெரும் தலைவலியாக உள்ளது.