Skip to main content

ஈரோட்டில் மேலும் இருவருக்கு கரோனா அறிகுறி!!! 168 பேர் தீவிர கண்காணிப்பு!!!

Published on 23/03/2020 | Edited on 23/03/2020

 

கரோனா வைரஸ் தாக்கத்தை குறைக்க மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்கள் தனிமை படுத்தப்பட்ட பகுதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
 

தாய்லாந்தை சேர்ந்த ஏழு பேர் தொழுகைக்காக ஈரோட்டில் உள்ள கொல்லம்பாளையம் என்ற பகுதியில் இரண்டு மசூதிகளுக்கு கடந்த 11ஆம் தேதி வந்திருந்தனர். இதில் இருவர் 16ஆம் தேதி சொந்த நாட்டுக்கு திரும்ப கோவை விமான நிலையம் சென்றபோது அதில் ஒருவருக்கு காய்ச்சல் இருப்பதை கண்டுபிடித்து கோவை அரசு மருத்துவமனையில் அவரை அட்மிட் செய்தனர்.

 

erode


 

அப்போது மற்றொருவரிடம் விசாரணை செய்ததில் மேலும் 5 பேர் ஈரோட்டில் உள்ளதாக அவர் தகவல் கூற, உடனே அரசு அதிகாரிகள் அந்த நபரோடு ஈரோடு வந்து மேலும் இருந்த 5 பேரையும் மருத்துவ பரிசோதனைக்குக் கொண்டு சென்றனர். இந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆன அந்த நபர் அன்று இரவே இறந்து விட்டார். அவர் இறப்புக்கு காரணம் சிறுநீரக பிரச்சனை எனக் கூறப்பட்டது.

 

ஈரோட்டில் பிடிபட்ட இந்த ஆறு பேரில் இரண்டு பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இந்தநிலையில் 23 ஆம் தேதி மாலை ஈரோடு மாவட்ட ஆட்சியர் கோபி அருகே மயிலம்பாடி என்ற பகுதிக்குச் சென்று அங்கு இயங்கி வந்த யான் தொழிற்சாலையைப் பார்வையிட்டார். அப்போது ஒரு வாரத்துக்கு முன்பு வடமாநிலத்தில் இருந்து வந்திருந்த 24 பேர் இருந்தனர். அவர்கள் தொழிலாளிகளாக அங்கு பணிபுரிந்தனர். அவர்களைப் பரிசோதனை செய்ததில் இரண்டு பேருக்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரிந்து அவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 
 

அந்த இரண்டு பேருக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பதாக தற்போது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் தாய்லாந்திலிருந்து வந்திருந்த நபர்கள் தங்கியிருந்த ஈரோடு மசூதி பகுதிகளில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதில் 168 பேர் அந்த தாய்லாந்து நபர்களோடு தொடர்பு இருந்ததும் அவர்களை மருத்துவ பரிசோதனைக்காகத் தனிமைப்படுத்தி வைத்துள்ளார்கள். 


 

சார்ந்த செய்திகள்