திருவண்ணாமலை ஒன்றியம் ஆடையூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கலைவாணி மற்றும் தேவதாஸ் என இருவர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையின்போது இருவரும் தலா 906 வாக்குகள் என சம வாக்குகளை பெற்றனர். இரண்டாவது முறை எண்ணப்பட்டும் அதே கணக்கே வந்தது.
இதனால் இரண்டு வேட்பாளர்களிடம் ஆலோசித்த அதிகாரிகள், தேர்தல் ஆணைய விதிகளின் படி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்போம் எனக்கூறினர், அதன்படியே ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இரு துண்டு தாள்களில் இருவரது பெயரும் எழுதப்பட்டு சின்ன பாக்ஸில் போட்டு குலுக்கப்பட்டது. குலுக்கியபின் ஒரு சீட்டை அங்கிருந்த ஒருவர் மூலம் எடுக்கச்சொல்லப்பட்டு, அதை எடுத்து பிரித்துப்பார்த்தபோது கலைவாணி பெயர் வந்தது. இதனால் அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.
கலைவாணி அவரது கணவர் முனுசாமி தொடர்ச்சியாக 3 தேர்தல்களில் நின்று தோல்வியை சந்தித்தவர்கள். இந்த தேர்தலில் குலுக்கல் முறையில் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.