காலை உணவுத் திட்டத்தை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தும் நோக்கில், நாகை மாவட்டம் திருக்குவளையில் கலைஞர் படித்த அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் அமர்ந்து உணவு அருந்தினார். மேலும் இத்திட்டத்தை தங்கள் பகுதியில் இருக்கும் எம்.எல்.ஏக்கள் தொடங்கி வைக்குமாறு தமிழக அரசு சார்பில் அனைத்துக் கட்சி எம்.எல்.ஏவிடமும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், காலை உணவுத் திட்டத்தை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தும் நோக்கில் இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “அது... இன்றைக்கு நல்ல நாள்; மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி மகிழ்ச்சியோடு விடைபெறுகிறேன்” என்றார்.