Skip to main content

இ-பாஸ் இல்லாமல் நுழைந்தால் வாகனங்கள் பறிமுதல்! எஸ்.பி. அதிரடி உத்தரவு!

Published on 14/06/2020 | Edited on 14/06/2020
police sp




மாவட்டத்திற்குள் இ-பாஸ் இல்லாமல் நுழையும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று திண்டுக்கல் எஸ்.பி. சக்திவேல் உத்திரவிட்டு உள்ளார். 


திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவுகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது தொற்று தீவிரமாக பரவி வருவதால் திண்டுக்கல் மாவட்டத்தில் நோய்த் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.


அதன்படி வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து வாகனங்களில் வரும் நபர்களையே அதிகமான நோய் தொற்று பரவி வருகிறது. திண்டுக்கல் மாவட்ட எல்லையில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தணிக்கை செய்யப்படும் நிலையில் தற்போது மேலும் கூடுதலாக 7 சோதனை சாவடிகள் குறுக்கு சாலைகளில் அமைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


மேலும் இ.பாஸ் இல்லாமல் திண்டுக்கல் மாவட்ட எல்லைகள் வந்த 15 வானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகம் கரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சென்னை போன்ற பகுதிகளிலிருந்து பயணிகள் தாமாகவே முன்வந்து கரோனா  பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் இறங்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இ-பாஸ் இல்லாமல் திண்டுக்கல் மாவட்ட எல்லைக்குள் வரும் அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்