Skip to main content

பொதுக்குழுவை கூட்ட ஓபிஎஸ் வலியுறுத்தல்?

Published on 19/08/2017 | Edited on 19/08/2017
பொதுக்குழுவை கூட்ட ஓபிஎஸ் வலியுறுத்தல்?

அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு விவகாரத்தில் தொடர்ந்நு இழுபறி நிடித்து கொண்டுவரும் நிலையில் ஓபிஎஸ் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையான சசிகலா குடும்பத்தை சேர்ந்த சசிகலா உட்பட அனைவரையும் கட்சியில் இருந்து விலக்குவதாக அறிவிப்பு செய்ய வேண்டும் என்பது.

எடப்பாடி தரப்பு இரு அணி பேச்சுவார்தையின் போது டி.டி.வி.தினகரனை கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக கூறியிருக்கிறது. ஆனால் தற்காலிக பொதுச்செயலாளராக இருக்கும் சசிகலாவை நீக்குவதாக எந்த அறிவிப்பும் எடப்பாடி அணி கொடுக்கவில்லை.



இதனை ஓபிஎஸ் தரப்பு எடப்பாடி அணியோடு பேசும் போது, ஏற்கனவே சசிகலாவை பொதுக்குழுவின் மூலம் தான் பொதுச்செயலாளராக ஆக்கினோம். மீண்டும் கட்சியின் பொதுக்குழுவை கூட்டி முறைப்படி தான் சசிகலாவை நீக்க வேண்டும் என கூறியிருக்கிறார்கள்.

அதற்கு ஓபிஎஸ் தரப்பு அப்படி என்றால் கட்சியின் பொதுக்குழுவை கூட்டி சிசிகலாவை கட்சியில் இருந்து நீக்குவோம் என்று எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிடவேண்டும் என்று இறுதியாக கூறியிருக்கிறார்கள். இந்த நிலையில் எடப்பாடி அறிக்கை வெளியிடுவாரா என்று ஓபிஎஸ் தரப்பு எதிர்பார்த்து உள்ளது.

- ஜீவாதங்கவேல்

சார்ந்த செய்திகள்