Skip to main content

'உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்'-வானிலை ஆய்வு மையம் தகவல்

Published on 01/11/2024 | Edited on 01/11/2024
'Emerging Depression'-Meteorological Center Information

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

 

இந்நிலையில் நெல்லை, கன்னியாகுமரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை,தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 15 மாவட்டங்களில்  கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 2ஆம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 3 முதல் நவம்பர் 6 தேதி வரை தமிழகத்தில் பரவலாக மிதமான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் முதல் வாரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று உருவாக இருக்கிறது. காற்றழுத்த தாழ்வு பகுதியானது தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம்,  அது தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்