தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 490 பேரூராட்சிகளுக்கு ஒரேகட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுதாக்கல் தொடங்கிவிட்டது. திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளும், அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளும் மாநகர, நகர, பேரூராட்சி வார்டுகள் யாருக்கு எத்தனை என பிரித்துக்கொள்ளுவதற்கான ஆலோசனை அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தேர்தல் ஆணையம், ‘ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவி விலகாமல் நகர்ப்புறத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவர்’ என அறிவித்துள்ளது. மேலும், வெற்றி பெற்றாலும், வெற்றி வாய்ப்பை இழந்தாலும் ஏற்கனவே வகித்த பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவர் என்றும், இந்த நடவடிக்கையை, ஊராட்சிகளின் ஆய்வாளர் என்ற நிலையில் ஆட்சியரே எடுக்கும் வகையில் வழிவகை செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.