வாரம் தோறும் திங்கள் கிழமையன்று அனைத்து துறைகளின் அரசு அதிகாரிகள் அவர்கள் தொடர்பான அலுவலகங்களில் கண்டிப்பாக இருக்கவேண்டும். மக்கள் தரும் கோரிக்கை மற்றும் புகார் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப்படுகிற திங்கள் கிழமை குறைதீர் நாள் நடக்கும்.

குறிப்பாக நெல்லை கலெக்டர் அலுவலகம் மாவட்ட தலை நகரங்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அலுவலகங்களில் திங்கள் கிழமையன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கும். இதன் மூலம் மக்கள் பயனடைந்துள்ளனர். அரசியல்வாதிகள் முதல் அடித்தட்டு மக்கள் வரையிலானவர்கள் அன்றைய தினம் தங்களது குறைகளின் தீர்வுக்காக அலுவலகத்திற்கு திரளுவதுண்டு. திங்கள் கிழமை குறைதீர் கூட்டத்தால் நெல்லை கலெக்டர் அலுவலகம் பரபரக்கும்.
தற்போது பார்லிமெண்ட் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று மாலை அறிவித்து விட்டது. இதன் எதிரொலியாக நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் தேர்தல் முடியும் வரை ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதே போன்று நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில செவ்வாய் கிழமை தோறும் நடக்கும் குறை தீர் கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதே சமயம், வழக்கம் போல் மக்கள் யாரேனும் குறை தீர்க்கிற மனுவுடன் வந்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பிரத்யேகமாக வைக்கப்பட்டிருக்கும் புகார் பெட்டியில் மனுக்களைப் போட வேண்டும் என்று ஆட்சியர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.