Published on 07/01/2019 | Edited on 07/01/2019

உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணை மே மாதம் இறுதியில் அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக தரப்பில் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் மேற்கண்டவாறு தகவல் தெரிவித்துள்ளது.
மற்றபடி வார்டு மறுவரையறை பணிகள் முழுமையாக முடிவடைந்துவிட்டது என்று மாநில தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்று திமுக சார்பில் தொடர்ந்த வழக்கை ஜனவரி 28ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.