Skip to main content

மருத்துவமனையில் ஆதரவாளர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய எடப்பாடி பழனிசாமி! 

Published on 11/07/2022 | Edited on 11/07/2022

 

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக இன்று காலை ஒ.பி.எஸ். ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தினுள் நுழைந்தனர். அங்கு கதவுகள் பூட்டப்பட்டு இருந்த நிலையில், அதனை உடைத்து ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தினுள் நுழைந்தனர். அதன்பின் ஓ.பி.எஸும் அங்கு விரைந்தார். 

 

இதனைத் தொடர்ந்து எடப்பாடியின் ஆதரவளர்களான விருகை ரவி, வேளச்சேரி அசோக், சோழிங்கநல்லூர் கந்தன் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் கட்சி அலுவலகத்திற்கு வந்தனர். மேலும் அவர்கள் ஓ.பி.எஸ்-ஐ வெளியேறச் சொல்லி கோஷங்களை எழுப்பினர். அதன்பின் அவர்கள் இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. 

 

இதில், அதிமுக மகளிர் அணி செயலாளர் மஞ்சுளா, ஜெயதேவி ஆகியோர் தாக்கப்பட்டனர். அதற்குள் அங்கு விரைந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி காயம் ஏற்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதன்பிறகு வருவாய் கோட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் இணைந்து அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். 

 

இந்த தகராற்றில், விருகை ரவி, அசோக், கந்தன் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டன. அதனைத் தொடர்ந்து அவர்களும் சென்னை ராஜீகாந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவர்கள் உட்பட காயம் அடைந்த தனது ஆதரவாளர்களை இ.பி.எஸ். இன்று மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்