
குமாி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளா்ச்சி திட்டங்களை ஆய்வு செய்வதற்காக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, இன்று (10-ஆம் தேதி) நாகா்கோவில் வந்தாா். சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்து, அங்கிருந்து காா் மூலம் நாகா்கோவில் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு, வழியில் 9 இடங்களில் அதிமுகவினா் வரவேற்பு கொடுத்தனா்.
மதியம் நாகா்கோவில் அரசு விருந்தினா் மாளிகைக்கு வந்த அவா், மாலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடந்த, ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அதிகாாிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை வழங்கினாா். தொடா்ந்து ஏற்கனவே பணிகள் முடிந்த நிலையில் இருந்த 153. 92 கோடி மதிப்பிலான 21 திட்டங்களை தொடங்கி வைத்தாா். மேலும் 60. 44 கோடி மதிப்பிலான 36 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா். பின்னா் விவசாயப் பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழு பிரதிநிதிகள், சிறுகுறு தொழிற் கூட்டமைப்பினா், மீனவ பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினாா்.
தொடா்ந்து, அவா் பத்திாிகையாளா்களிடம் பேசும்போது, குமாி மாவட்டம் உட்பட தமிழகத்தில் கரோனா பரவல் கட்டுப்படுத்தபட்டுள்ளது. அதே நேரத்தில், இந்த மாவட்டத்தின் அருகில் இருக்கும் கேரளாவில் கரோனா பரவல் அதிகாித்து வருவதாக தகவல் உள்ளது. மேலும், குமாி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கும், கேரளாவில் இருந்து குமாி மாவட்டத்துக்கும் பொதுமக்கள் வந்து சென்று கொண்டிருக்கின்றனா். இதனால், குமாி மாவட்டத்தில் கரோனா பரவலுக்கு வாய்ப்பு இருக்கிறது. குமாி மாவட்டத்தில் கரோனா அதிகாிக்கும் என்றால், அது தமிழகம் முமுவதும் பரவிவிடும். எனவே, குமாி எல்லையை இன்றிலிருந்து தீவிரமாகக் கண்காணிக்க அதிகாாிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன.

மேலும், சுனாமியால் அடித்துச் செல்லப்பட்டு, அதன்பிறகு புதிதாகக் கட்டபட்டிருக்கும், கீழ மணக்குடி மற்றும் மேலமணக்குடி இணைப்புப் பாலத்துக்கு காமராஜா் ஆட்சியில் நோ்மை மிகு அமைச்சராக இருந்த, அதே ஊரைச் சோ்ந்த 'லூா்தம்மாள் சைமன்' பெயர் அந்தப் பாலத்துக்கு சூட்டப்படுகிறது. இதே போல், சுதந்திரப் போராட்ட வீரரான சதாவதானி செய்கு தம்பி பாவலா், தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் செய்த தொண்டைப் போற்றி அவரை பெருமைப்படுத்தும் விதமாக நாகா்கோவில் மாநகராட்சியின் 18 ஆவது வாா்டு கோட்டாா் இடலாக்குடி சந்தி தெருவுக்கு, 'சதாவதானி செய்கு தம்பி பாவலா்' பெயா் சூட்டப்படுகிறது.
கரோனாவால் சுற்றுலாப் பயணிகளின் பாா்வைக்கு, தடை செய்யபட்டிருந்த குமாி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் இன்று முதல் திறந்து விடப்படுகிறது. அதே போல் கன்னியாகுமாியில், திருவள்ளுவா் மற்றும் விவேகானந்தா் பாறைக்குச் சுற்றுலா பயணிகள் செல்ல படகுப் போக்குவரத்து, இன்று முதல் தொடங்க உத்தரவிட்டுள்ளேன் என்றாா். நிகழ்ச்சியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், செய்தி மக்கள் தொடா்பு துறை அமைச்சா் கடம்பூா் ராஜீ ஆகியோா் உடனிருந்தனா்.