தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்கள், அப்போது,
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சியில் இருந்து திருப்பரங்குன்றம் தொகுதியில் 8 முறை அதிமுக வெற்றியடைந்துள்ளது, ஆகையால் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக கோட்டை. வரும் இடைத்தேர்தலில் 50,000 வாக்கு வித்தியாசத்தில் நாங்கள் வெற்றிப் பெறுவோம் திருப்பரங்குன்றம் மட்டும் அல்ல திருவாதூர் தொகுதியிலும் அதிமுக மகத்தான வெற்றிப் பெறும். இந்தியா ஒரு ஐனநாயக நாடு ஆகையால் இங்கு யார் வேண்டும்மானலும் கட்சி தொடங்கலாம், தங்கள் கருத்துக்களை சொல்லலாம்.
வருகிற 7 ந் தேதி தமிழகத்திற்கு தேசிய வானிலை மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளதை முன்னிட்டு உயர் அதிகாரிகள் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் 3 முறை ஆலோசனைக் கூட்டம் நடத்தி தகுந்த முன்னெற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, யாரும் பயம் கொள்ள வேண்டாம். கடந்த 2015 ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு அமைச்சர்தான் காரணம் என்ற தவறான செய்தியை திமுகவினர் தெரிவித்து வருகின்றனர்.
மழை பெய்வது இயற்கை, இயற்கையை யாரும் தடுக்க முடியாது. கேரளாவில் கூட கனமழை பெய்து பல கிராமங்கள் தண்ணீரில் முழ்கியது. சில தினங்களுக்கு முன் இந்தோனேஷியாவில் கூட சுனாமி ஏற்பட்டு 1000திற்கும் மேற்ப்பட்டோர் இறந்துள்ளனர். ஆர்.கே நகரில் அவர்கள் எவ்வாறு வெற்றி பெற்றார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் வீரமும், விவேகமும் நிறைந்தவர்கள், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களுக்கு நன்றாக தெரியும். மதுரை மண் மிக ராசியான மண் ஆகையால் இடைத்தேர்தல் பற்றிய ஆலோசனைக் கூட்டத்தை நாங்கள் இன்று இங்கு தொடங்கியுள்ளோம், வருகிற 7 ந்தேதி திருவாதூரில் ஆலோசனைக் கூட்டம், 14 ந் தேதி பொதுக் கூட்டம் நடைப்பெற உள்ளது. பாரத பிரதமரை நேரில் சந்தித்து எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி கோருவோம். என்று கூறினார்கள்.