எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்:
மகேந்திரன் ஆர்ப்பாட்டம்!
மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டும், தமிழக அரசை கண்டித்தும் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மகேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவி அனிதாவின் மரணத்திற்கு எடப்பாடி அரசும், தமிழக அரசுமே முழு பொறுப்பு. நீட் தேர்வுக்கு சட்டத்தின் மூலம் முழுமையான தீர்வு காண வேண்டும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- அருண்பாண்டியன்
படம் - ஸ்டாலின்