எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
கட்சியில் இருந்து சசிகலா, தினகரன் இருவரையும் நீக்க பொதுக்குவை கூட்ட முடிவு எடுத்துள்ளனர் அண்மையில் இணைந்த ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். இதற்காக சென்னையில் உள்ள தனது இல்லத்தில் மாவட்ட வாரியாக அமைச்சர் தலைமையில் எம்.எல்.ஏ.க்களை அடையாறில் உள்ள தனது வீட்டிற்கு வரவழைத்து ஆலோசனை நடத்தினார்.
விழுப்புரம், கடலூர், திருச்சி மாவட்ட எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசித்தார். விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட எம்.எல்.ஏ.க்களான சத்யா பன்னீர்செல்வம் (பண்ருட்டி), முருகுமாறன் (காட்டுமன்னார்கோவில்), பாண்டியன் (சிதம்பரம்), பிரபு (கள்ளக்குறிச்சி), குமரகுரு (உளுந்தூர்பேட்டை) ஆகியோர் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர்.
அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் சென்று சந்தித்தனர்.
இதே போல் ஒவ்வொரு மாவட்ட எம்.எல்.ஏ.க்களையும் அமைச்சர்கள் தலைமையில் நாளையும், நாளை மறுநாளும் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார்.