Skip to main content

எடப்பாடி பழனிசாமியைக் கடத்துவதாக மிரட்டல் விடுத்த புரோட்டா மாஸ்டர் சிறையில் அடைப்பு 

Published on 20/07/2019 | Edited on 20/07/2019

 


19.07.2019 பிற்பகலில் காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணான 100ஐ தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கடத்தப் போவதாகக் கூறிவிட்டு உடனடியாக இணைப்பைத் துண்டித்தார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் அந்த நபர் பேசிய தொலைபேசி எண்ணை ஆய்வு செய்த போது அவர் திருச்சி தில்லை நகரைச் சேர்ந்த ரகமதுல்லா( வயது 40) என தெரியவந்தது.

 

t

 

இது தொடர்பான தகவலின் பேரில் அவரை கைது செய்து தில்லை நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாஸ்ட் புட் கடை ஒன்றில் புரோட்டா மாஸ்டர் வேலை செய்து வந்த இவர், வேலையிலிருந்து நிறுத்தப்பட்டதால் மன அழுத்தம் காரணமாக முதலமைச்சரை கடத்தப்போவதாக மிரட்டல் விடுத்ததாக  கூறப்படுகிறது.

 

தமிழகம் முழுவதும் தற்போது என்.ஐ.ஏ. சோதனை நடந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் இப்படி ஒரு போன் கால் என்பதால் தீவிரவாத அமைப்புக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா ? என்கிற ரீதியில் விசாரணை நடத்தி கடைசியில் இன்று நீதிபதியிடம் ஆஜர் செய்து,  இரவோடு இரவாக கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். 
 

சார்ந்த செய்திகள்