Skip to main content

" பான் கார்டு " இணையதளம் மூலம் எளிதாக விண்ணப்பிக்கலாம் !

Published on 14/03/2019 | Edited on 14/03/2019

இந்தியாவில் அனைத்து மாநில மக்களும் வங்கி கணக்கை (Account Opening) தொடங்க வேண்டுமானால் பான் கார்டு (PAN CARD) முக்கியமானது. இணைய தள முகவரி : 
https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html. பான் கார்டு விண்ணப்பித்தவுடன் பான் கார்டு நிலையை அறிய இணையதள முகவரி : https://tin.tin.nsdl.com/pantan/StatusTrack.html .
 

pancard online

" பான் கார்டு " விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் !
1. விண்ணப்பதாரரின் புகைப்படம் (Passport Size Photo).
2.ஆதார் அட்டை கட்டாயம். ( இதில் உள்ள விவரங்கள் பான் கார்டில் இடம் பெறும்)
3.ஆதார் அட்டையில் மொபைல் எண் இணைத்திருக்க வேண்டும். ஏனெனில் பான் கார்டு விண்ணப்பிக்கும் போது "ஆதார்அட்டை " Verification Code "OTP" பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும். இதனை குறிப்பிட்டால் மட்டுமே பான் கார்டு விண்ணப்பம் இறுதி வடிவம் பெறும். பின்பு பான் கார்டு "Acknowledgement No" பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பான் கார்டு இருந்தால் மட்டுமே வங்கிகளில் புதிய கணக்கை தொடங்க முடியும் என ரிசர்வ் வங்கி ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதன் படி வரி ஏய்ப்பு செய்பவர்கள் எண்ணிக்கை குறையும். மேலும் ஒவ்வொருவரின் சராசரி ஆண்டு வரவு செலவு கணக்கை வருமான வரித்துறை ஆராய எளிதாக இருக்கும். ஒருவருக்கு ஒரு பான் எண் மட்டுமே மத்திய வருமான வரித்துறையால் வழங்கப்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்திருந்தால் இது சட்டப்படி குற்றமாகும். இதை வருமான வரித்துறையால் கண்டறியப்பட்டால் "Provisions of section" 272B of the Income tax Act 1961 படி ரூபாய் 10000 அபராதம் வசூலிக்கப்படும். பான் கார்டு விண்ணப்பிக்க அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் ரூபாய் 110 மட்டுமே.

pancard status

இந்த இணையதளத்தை பயன்படுத்தி பான் கார்டில் பெயர் , பிறந்த தேதி உள்ளிட்டவற்றை திருத்தம்  மேற்கொள்ளலாம். மேலும் விண்ணப்பித்த பான் கார்டு ஒரு மாதத்திற்குள் கூரியர் மூலம் வீட்டிற்கு வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.


பி.சந்தோஷ் , சேலம்.

சார்ந்த செய்திகள்

Next Story

மனைவி வைத்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்; பதறி அடித்து போலீசிடம் ஓடிய கணவர்!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
The husband ran to the police in panic for Whatsapp status by wife

உத்தரப்பிரேதசம் மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் மத்தியப்பிரதேசத்தில் உள்ள பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். 

இந்த நிலையில், திருமணமான சில மாதங்களிலேயே கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்து போன மனைவி, தனது கணவனை விட்டு பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். மேலும், அவர் நிரந்தரமான விவாகரத்து கேட்டும் வந்துள்ளார். இதனிடையே, கணவரை விட்டு பிரிந்து வாழ்வதால், முறையான விவாகரத்து கிடைக்கும் வரை தனக்கான பராமரிப்பு தொகையை கணவர் வழங்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் மனைவி புகார் அளித்துள்ளார். 

இதனையடுத்து, தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவியை, சமாதானம் செய்வதற்காக மனைவி வீட்டுக்கு கணவர் சென்றுள்ளார். ஆனால், அங்கு, மனைவி வேறு ஒருவருடன் தகாத உறவு வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து, கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ‘மனைவியும் அவரது குடும்பத்தினரும் தன்னை கொலை செய்ய முயற்சி செய்கின்றனர். மேலும், மனைவி தனது பக்கத்து வீட்டு நபருடன் தகாத உறவு வைத்திருப்பதாகவும், அதுவே தகராறுக்கு காரணம்’ என்று தெரிவித்துள்ளார். 

இந்த புகாரை அடுத்து கோபமடைந்த மனைவி, தன்னுடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில், ‘என்னுடைய கணவரை கொல்பவருக்கு ரூ.50,000 பரிசுத்தொகை உடனடியாக வழங்கப்படும்’ என்று அறிவித்துள்ளார். இந்த விவரம் கணவருக்கு தெரியவர, பதறி அடித்து போன அவர் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று இந்த விவகாரம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். ஒவ்வொரு முறையும், இந்த தம்பதிகள் மாறி மாறி அளித்த புகார்கள் மீது கண்டு கொள்ளாமல் இருந்த போலீசார், இந்த முறை பிரச்சனையின் வீரியத்தை புரிந்துகொண்ட அவர்கள், மனைவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

‘கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்திற்கு’ - ஐ.பி.எல். நிர்வாகம் முக்கிய தகவல்! 

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Attention Cricket Fans - IPL Administration is key information

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.

அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22இல் நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் மோதுகிறது. 9வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு 2 ஆம் கட்ட அட்டவணை வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

அதே சமயம் கடந்த ஆண்டு நேரடியாக டிக்கெட் வாங்கி கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்திருந்தது. இந்நிலையில், இந்த புகார்களை தடுக்கும் வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ள போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விற்பனை குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.