Skip to main content

விடுமுறை காலங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்த 18-ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்!

Published on 01/10/2017 | Edited on 01/10/2017
விடுமுறை காலங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்த
18-ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்!

கோவை மண்டல போக்குவரத்துத் துறை இணை ஆணையர் முருகானந்தம் உத்தரவின் பேரில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், அவர்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த ஆய்வில் 100-ஆம்னி பேருந்துகள் உள்பட மொத்தமாக 397 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. இதில், பயணிகளிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலித்த 18-ஆம்னி பேருந்துகளுக்கு ரூ. 31,400 அபராதம் வசூலிக்கப்பட்டது.

அதிவேகமாக வாகனம் இயக்குதல், அதிக பாரம் ஏற்றிச் செல்லுதல், ஆவணங்கள் இல்லாமல் வாகனம் இயக்கியது தொடர்பாக ரூ.57,200 அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், வரி செலுத்தாமல் வாகனம் இயக்கியது தொடர்பாக ரூ:-8,890 அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்தச் சோதனை வரும் அக்டோபர் 3-ஆம் தேதி வரை தொடரும் என்று போக்குவரத்துத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

- சிவசுப்பிரமணியம்

சார்ந்த செய்திகள்