தற்கொலையில் பல வகை உண்டு. அதில், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்வது கொடூரமானது. உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம் மேலோங்கி இருப்பவர்களால் மட்டுமே, இதனை செயல்படுத்த முடியும்.
விருதுநகர் காவல்துறை துணை கண்காணிப்பாளராக இருக்கிறார் லட்சுமணன். பொதுநலனோடு செயல்பட வேண்டிய இந்தப் பணியில், மக்களின் பாதுகாப்பு என்பது மிகமிக முக்கியம். காவல்துறை அதிகாரிகளில் சிலர், தங்களின் குடும்பத்தைச் சரிவர கவனிப்பதில்லை. காரணம் என்னவென்று கேட்டால், வேலைப்பளு என்பார்கள்.
லட்சுமணனின் மகன் சுவாமிநாதனுக்கு வயது 21. திருமணம் ஆகாதவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பிபிஏ படித்தவர். என்ன பிரச்சனையோ தெரியவில்லை. இன்று மீசலூர் அருகே, சென்னை – செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் வந்துகொண்டிருந்தபோது, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
விருதுநகர் தாலுகா காவல் நிலையம் விசாரணை நடத்திக்கொண்டிருக்கும் இந்த வழக்கில், சுவாமிநாதன் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியிருக்கிறது. ஆனாலும், தற்கொலை செய்துகொண்டது காவல்துறை அதிகாரியின் மகன் என்பதால், அந்தக் கடிதத்தை வெளியிடவில்லை.
Published on 14/08/2018 | Edited on 27/08/2018