Skip to main content

 பள்ளி மாணவி மீது கரும்பு டிராக்டர் ஏரி உடல் நசுங்கி உயிரிழப்பு  

Published on 22/03/2018 | Edited on 22/03/2018
sugar

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த புத்தேரி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி.  இவரது மகள் ஆனந்தி(12).  அருகில் தொளார் அரசு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார்.  மதிய சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வந்து மீண்டும் தோழிகளோடு பள்ளிக்கு செல்லும் போது ஆதமங்கலத்திலிருந்து பெரம்பலூர் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றி சென்ற டிராக்டர் ஆனந்தியின் மீது மோதியதில் தலை நசுங்கி பலியானார்.
சத்தியவாடியை சேர்ந்த   டிராக்டர்  டிரைவர் முத்தையனை ஆவினங்குடி போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆசிரியர் நடத்திய கொடூர சோதனை; அவமானம் தாங்காமல் மாணவி எடுத்த விபரீத முடிவு!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
A cruel experiment conducted by the teacher to student in karnataka

கர்நாடகா மாநிலம், பாகல்கோட்டை பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளியில் இருந்து கடந்த 16ஆம் தேதி வீடு திரும்பினார். வீடு திரும்பிய அவர், வீட்டில் உள்ளவர்கள் யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, வெளியே சென்ற மாணவியின் பெற்றோர், வீட்டுக்கு வந்து பார்த்த போது, தங்களது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாகல்கோட்டை போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், மாணவி படித்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஜெயஸ்ரீ என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், ஜெயஸ்ரீ வைத்திருந்த பையில் இருந்த ரூ.2,000 பணத்தை காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதில் சந்தேகமடைந்த ஆசிரியர், 8ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியை அழைத்து கேட்டுள்ளார். ஆனால், அந்த மாணவி, தான் அந்த பணத்தை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். மாணவி உறுதியாக கூறியும் சந்தேகம் அடங்காத ஜெயஸ்ரீ, சக மாணவிகள் முன்னிலையில் மாணவியின் ஆடைகளை களைந்து சோதனை செய்துள்ளார்.

இதில், மன உளைச்சல் அடைந்த மாணவி, பள்ளி முடிந்ததும் மாலை வீடு திரும்பியுள்ளார். மேலும், அவர் சோகம் தாங்காமல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, ஆங்கில ஆசிரியர் ஜெயஸ்ரீ மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

டிராக்டர் கவிழ்ந்து 15 பேர் பலி; புனித நீராடச் சென்றபோது நிகழ்ந்த சோகம்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
The tragedy that happened when I went to take a holy bath and 15 passed away in tractor overturn

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள புனித நீரான கங்கை நதியில் ஏராளமான மக்கள் ஆண்டுதோறும் நிகழும் மகா பெளர்ணமி தின நாளில் புனித நீராடி சாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநிலம், கஸ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமத்தினர் ஏராளமானோர், மகா பெளர்ணமியை முன்னிட்டு கங்கை நதியில் புனித நீராடுவதற்காக இன்று (24-02-24) காலை டிராக்டரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, முன்னே சென்றுகொண்டிருந்த கார் மீது மோதுவதைத் தடுக்கும் முயற்சியில் டிராக்டர் ஓட்டுநர் ஈடுபட்டிருந்தார். ஆனால், டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக, அப்பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 7 சிறுவர்கள் உட்பட 15 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது அவர்களுக்குத் தெரியவந்தது. மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், பலியானோரின் குடும்பத்துக்கும் காயமடைந்தவர்களுக்கும் நிவாரணம் அறிவித்துள்ளார். கங்கை நதியில் புனித நீராடச் சென்றபோது டிராக்டர் கவிழ்ந்து 15 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.