திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பணிமனையிலிருந்து அரசு பேருந்து ஓட்டுநர் செல்வம் மற்றும் நடத்துநர் செல்வகுமார் ஆகியோர் அரசு பேருந்தை எடுத்துக்கொண்டு ஆந்திர மாநிலம் குப்பத்திற்கு சென்றுள்ளனர்
அப்போது பயணிகளை ஏற்றிக் கொண்டு மீண்டும் திருப்பத்தூர் நோக்கி வந்தனர். அப்போது நாட்றம்பள்ளி அடுத்த கட்டேரி அம்மன் கோவில் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வந்த அரசு பேருந்தின் ஓட்டுநருடன் பேருந்து எடுக்க ஏன் கால தாமதம் ஆனது என, செல்வம் பேசிக்கொண்டு அரசுப் பேருந்தை ஓட்டியதால், கட்டுப்பட்டையிலிருந்த சாலையின் ஓரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தால் பேருந்தில் பயணித்த 10 பேர் லேசான காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து 108 ஆம்புலன்ஸ்க்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்ததின் பெயரில் விரைந்து வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் காயம் அடைந்தவர்களை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் காயமடைந்த பயணிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.