விருதுநகர் மாவட்ட எல்லையில் மேலாண்மறைநாடு என்ற கிராமம் உள்ளது.கரோனா பரவலைத் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில், இந்த கிராமத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை நடந்திருக்கிறது. நண்பர்களான குமாரும் பிரபுவும் மேலாண்மறை நாடு சென்று மது அருந்திவிட்டு டூ வீலரில் சுற்றி திரிந்தபோது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆலங்குளம் காவல்துறையினரிடம் மாட்டினார்கள்.
----------
இந்தியாவில் பல மாநிலங்களில், ஊரடங்கை பொருட்படுத்தாமல் பொறுப்பற்று திரிபவர்களை மடக்கி, நூதன தண்டனை வழங்கிவரும் நிலையில், ஆலங்குளம் காவல்துறையினரும் அதே பாணியில் அவ்விரு இளைஞர்களுக்கும் தண்டனை வழங்கினர். அதன்படி, 300 மீட்டர் இடைவெளி விட்டு, குமாரும் பிரபுவும் சாலையில் உருண்டு புரண்டனர்.
ஆன்மிகவாதி ஒருவர் “கோவில்களில் மட்டுமே அங்க பிரதட்சணம் செய்வது வழக்கம். தலை, நெற்றி, கரங்கள், தோள்பட்டைகள், மார்பு, வயிறு, கால் முட்டிகள், பாத விரல்கள் போன்ற அங்க அவயங்கள் தரையில் படும்படி அங்க பிரதட்சணம் செய்தால் கர்ம வினைகள் நீங்கும் என்பது ஐதீகம். இதனை வேகமாக செய்தால் ஒரு பலனும் கிட்டாமல், உடலில் வலிதான் உண்டாகும்
கோவில்களில் வழிபாடு மூலம் இறைவனிடம் மன்னிப்பு கோரும் அங்கபிரதட்சணம் என்ற நடைமுறையை சாலையில் தண்டனையாக நிறைவேற்ற வைத்தது நெருடலாக இருக்கிறது. போதை ஏற்றிய நிலையில், காவல்துறையினர் அளித்த தண்டனையின்படி, சாலையில் உருண்ட குமாருக்கும் பிரபுவுக்கும் என்ன பலன் கிடைக்கப்போகிறதோ?” எனக் கேட்டார் வேதனையுடன்.