ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பைக் கண்டித்து திண்டுக்கல் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் இன்று (4ம் தேதி) காலை 10.00 மணியளவில் திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞரணி துணைச் செயலாளர் நா.கமல்குமார் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் இரா.நாராயணன், மாநகரத் தலைவர் அ.மாணிக்கம், மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.சக்தி சரவணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் மு.பாண்டியன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். மாவட்டத் தலைவர் இரா.வீரபாண்டியன் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து தொடக்க உரையாற்றினார்.
மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் மு.ஆனந்த முனிராசன், மண்டலத் தலைவர் மு.நாகராஜன், திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவை தலைவர் அ.மோகன், மாநகரச் செயலாளர் த.கருணாநிதி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தினை விளக்கி கண்டன உரையாற்றினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் பழ.இராசேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் இரா.காஞ்சித்துரை, திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவை துணைச் செயலாளர் தி.க.செல்வம், நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் இரா.ஜெயபிரகாஷ், வத்தலகுண்டு ஒன்றியத் தலைவர் எ.எ.முத்து மற்றும் சுந்தர், செபாஸ்டின் சின்னப்பன், கிஷோர் வேடசந்தூர் ராமகிருஷ்ணன், தடாமதி ஆகியோருடன் ஏராளமான கழகத் தோழர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை முழங்கினார்கள்.