





தமிழ்நாட்டின் தனியார் பத்திரிகை ஒன்று கொங்கு நாடு எனும் தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதில், தமிழ்நாட்டிலிருந்து கொங்கு மண்டலம் அடங்கிய பகுதியைத் தனியாகப் பிரித்து கொங்குநாடு என உருவாக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டம், கண்டன அறிக்கை என்று வெளியிட்டுவருகின்றனர்.
அந்தவகையில், இன்று (10/07/2021) சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அந்தத் தனியார் பத்திரிகை அலுவலகம் முன்பு கூடிய திராவிடர் கழகம் சார்பில் அந்தப் பத்திரிகையை எரித்துப் போராட்டம் நடத்தினர். அவ்வியக்கம் சார்பாக நடத்தப்பட்ட போராட்டத்தில், தமிழ்நாட்டைக் கூறுபோடத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் திட்டத்திற்கு தூபம் போடும் பத்திரிகையைக் கண்டித்து கோவை, திருப்பூர், சென்னை உள்ளிட்ட 5 இடங்களில் தினமலர் பத்திரிகை எரிப்பு போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர். அதன்படி அனைத்து இடங்களிலும் இப்போராட்டம் நடைபெற்றது.
அதேபோல் ‘தமிழகம் இரண்டாக பிரிகிறது, உருவாகுது கொங்கு நாடு’ என அந்த இதழில் வெளியானதைக் கண்டித்து அப்பத்திரிகையின் தலைமை ஆசிரியர் மீது பிரிவினைவாத வழக்கு தொடர வேண்டும் எனவும் தெரிவித்தனர்.