மது இல்லாமல் இருக்க முடியாது என்ற அளவிற்கு கொண்டு வந்ததே திராவிட மாடல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ''இந்த தலைமுறையை நாம் ஒன்னும் பண்ண முடியாது. அடுத்த தலைமுறையை நாம் காப்பாற்றி ஆகணும். இந்த தலைமுறை மது இல்லாமல் இருக்க முடியாது. அந்த அளவிற்கு திராவிட மாடல் கொண்டு வந்து விட்டது. போதை எங்கு பார்த்தாலும் கிடைக்கிறது. கஞ்சா எண்ணெய்யாக கிடைக்கிறது, சாக்லேட்டா கிடைக்கிறது, பிஸ்கட்டாக கிடைக்கிறது, பேப்பராக கிடைக்கிறது, ஸ்டாம்பாக கிடைக்கிறது, பொட்டலமாகக் கிடைக்கிறது, அபின், கோக்கின், ஹெராயின் எல்லாமே இங்க கிடைத்துக் கொண்டிருக்கிறது. போதையை ஒழிக்க தனியாக அமைப்பு இருக்கு ஆனால் அதில் போதுமான காவலர்கள் இல்லை. என்னுடைய கணக்குப்படி புதியதாக 20000 காவலர்கள் அதில் நியமனம் செய்யப்பட வேண்டும். இப்பொழுது இருப்பது 800 பேரோ, 500 பேரோ இருக்கிறார்கள். அது போதுமானது கிடையாது. 20 ஆயிரம் பேரை நியமனம் செய்து கடுமையான நடவடிக்கை எடுத்தால்தான் இதை ஒழிக்க முடியும்.
ஏனென்றால் யார் விற்கிறார்கள் என்று காவல்துறைக்கு தெரியும். காவல்துறை விற்பவர்களை மட்டும் தான் பிடிக்கிறார்கள். உங்களுக்கு யார் கொடுத்தார்கள், உங்களுக்கு சப்ளை செய்வது யார், அதனுடைய தலைவர் யார், எங்கிருக்கிறார், எங்கிருந்து இதெல்லாம் வருகிறது என்பதை எல்லாம் விசாரணை செய்து சரியான முறையில் யாரையும் கைது செய்யவில்லை. நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் அது போதுமானது கிடையாது. உடனடியாக கடுமையான நடவடிக்கைகள் எடுத்து இவர்களை எல்லாம் குண்டர் சட்டத்தில் போட்டு எங்கிருந்து சோர்ஸ் வருகிறதோ அந்த சோர்ஸ்-ஐ கட் பண்ண வேண்டும்'' என்றார்.