இந்தியா முழுவதும் ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் ஊரடங்கு தடை உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் அதிக அளவில் மக்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்காமல் நடமாட்டம் அதிகரித்துவரும் நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் ஒரு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவின்படி,
வேலூர் மாவட்டத்தில் வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன் என மூன்று நாட்கள் மட்டுமே மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் இயங்கும். இந்த நாட்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை காய்கறி கடைகளும், பெட்ரோல் நிலையங்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், பால் விற்பனை நிலையங்கள் காலை 6 முதல் 8 மணி வரையும், மாலை 4 மணிமுதல் 6 மணி வரையும் செயல்படும். ஊரடங்கு முடியும்வரை அனைத்து இறைச்சி கடைகளும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.