Skip to main content

சும்மா சுத்துன கைதுதான்... எச்சரித்த போலீஸ்... தெறித்து ஓடிய ரோமியோக்கள்... (படங்கள்)

Published on 25/03/2020 | Edited on 25/03/2020

 

மதுரையில் ஆரப்பாளையம், ஜெயந்திபுரம், கோரிப்பாளையம், சிம்மகல், ஐயர் பங்களா போன்ற பகுதிகளில் இளைஞர்கள் டூவீலரில் சுற்றி வருகின்றனர். ஆங்காங்கே டாப் அடிக்கின்றனர். போலீஸ் ரோந்து சென்று ஒவ்வொருவரையும் எச்சரித்துக் கொண்டே இருந்தனர். தற்போது ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் டூவீலரில் வந்த நபர்களை பிடித்து 100 ரூபாய் அபராதம் போட்டு அனுப்பிவிட்டனர்.
 

இந்நிலையில் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் சுகாதார பணியாளர்கள் நூறு பேர் டிராக்டரில் வந்து இறங்க, போலீசார் அவர்களை தடுத்து கும்பலாக வரக்கூடாது என்று சட்டம் இருக்கிறது, யார் உங்களை இப்படி கும்பலாக வரச்சொன்னது என்று அதட்டியுள்ளனர். அதற்கு டிராக்கடரில் வந்து இறங்கிய சுகாதார பணியாளர்கள் அரசாங்கம் சொல்லி தான் வந்தோம் என்று பதில் கூற இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


 

இருதரப்பினருக்கும் சிறு சலசலப்பு ஏற்பட்டதும், மற்ற போலீசாரும் சுகாதார அதிகாரிகளும் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தி தனித்தனியாக மருந்து அடிக்க வைத்தனர். அனைத்து பேருந்து நிலைய கடைகளுக்கும் தெருக்களுக்கும் அவர்கள் மருந்தை தெளித்தனர்.
 

அந்த வழியே வரும் இளைஞர்களை டூவீலர் மடக்கிப்பிடித்து எங்கு செல்கிறீர்கள், எதற்காக செல்கிறீர்கள், காரணமில்லாமல் செல்பவர்களிடம் 100 ரூபாய் அபராதமும் காரில் வந்தவர்களிடம் 200 ரூபாய் அபராதமும் விதித்து அவர்களை எச்சரித்து அனுப்புகின்றனர். தேவையில்லாமல் எந்த காரணமும் இன்றி வரகூடாது என்றும் இதேபோல் வந்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர். போலுசாரின் எச்சரிக்கையையடுத்து டூவீலரில் சுற்றிய ரோமியோக்கள் தெறித்து ஓடினர். 
 

 


 

சார்ந்த செய்திகள்