Skip to main content

'தலைமைக்கு தர்மசங்கடத்தை தர வேண்டாம்'-கட்சியினருக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!

Published on 30/05/2022 | Edited on 30/05/2022

 

dmk

 

அண்மையாக உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப்படுவார் என அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபட்டது. கடந்த வாரம் கொய்யாத்தோப்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் த.மோ.அன்பரசன், 'இன்னும் 18 மாதங்கள் பொறுத்திருந்தால் இப்பொழுது எம்எல்ஏவாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வந்து உங்களுக்கு வீடுகளை தருவார்' என பேசியிருந்தார்.

 

இந்நிலையில் தனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்கக் கோரி தீர்மானங்கள் நிறைவேற்றி தலைமைக்கு யாரும் தர்மசங்கடத்தை உருவாக்க வேண்டாம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'எந்த சூழலில் எந்த முடிவை எடுக்க வேண்டும் என்பதை தலைமை நன்கறியும். தனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு யாரும் தர்மசங்கடத்தை உருவாக்க வேண்டாம். கட்சியை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க அடுத்தகட்ட திட்டமிடலுடன் தயாராகி வருகிறேன். மக்கள்  பணியாற்றி கட்சிக்கும், அரசுக்கும் மகத்தான புகழை சேர்த்திடுவோம்' என தெரிவித்துள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்