Published on 27/03/2020 | Edited on 27/03/2020
தமிழ்நாடு மற்றும் புத்துச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் வழக்கறிஞர்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தலில்,

‘மக்களின் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் வழக்கறிஞர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். காவல் துறையினரை தேவையில்லாமல் சமூக ஊடகங்களில் எந்த வடிவிலும் விமர்சிப்பதை வழக்கறிஞர்கள் தவிர்க்க வேண்டும். இது, வழக்கறிஞர்கள் சட்ட விதிகளுக்கும், நெறிமுறைகளுக்கும் எதிரான செயல் ஆகும்.
சட்டவிதிகளுக்கு உட்பட்ட காவல்துறையின் செயல்பாடுகளை நீதித்துறை கவனித்து வருவதால், அதை நீதித்துறையே கவனத்தில் எடுத்துக்கொள்ளும். பிரதமர் மற்றும் முதல்வர் வேண்டுகோளுக்கு இணங்க வீட்டிற்குள் இருந்து வழக்கறிஞர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.’ எனக் கூறியுள்ளார்.