Skip to main content

பேழைக்குள் பேனாவை வைத்த பேரன்! - மெரினாவில் நெகிழ்ச்சி சம்பவம்!

Published on 09/08/2018 | Edited on 09/08/2018
stalin


திமுக தலைவர் கலைஞரின் உடலை சந்தனப்பேழைக்குள் வைத்தவுடன் குடும்பத்தினர் ஒவ்வொருவராக இறுதி அஞ்சலி செலுத்தினர். அப்போது கனிமொழியின் மகன் சிறுவன் ஆதித்யாவும் கலைஞரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். அந்த சமயத்தில் கலைஞரின் சட்டைப் பையில் பேனா இல்லாமல் இருப்பதைப் பார்த்தார்.

உடனடியாக அருகில் நின்று கொண்டிருந்த ஒரு அதிகாரியிடம் உங்கள் பேனாவை தர முடியுமா என்று கேட்டுவாங்கியுள்ளார். பேனாவை வாங்கிய ஆதித்யா ’இந்தப் பேனா எனக்கு வேண்டும். திரும்ப தர முடியாது’ என அந்த அதிகாரியிடம் கூறியுள்ளார்.

இதற்கு அந்த அதிகாரி எதற்காக என்று தெரிந்துகொள்ளலாமா? என ஆதித்யாவிடம் கேட்டுள்ளார். அப்போது, ஆதித்யா ’என் தாத்தாவை வைத்துள்ள பேழைக்குள் இந்த பேனாவை வைக்கப்போகிறேன்". பேனாவும் எழுத்தும் தான் என் தாத்தாவின் அடையாளமே. அதன் மூலம் தான் இத்தனை கோடி தமிழக மக்களின் உள்ளங்களை தன் வசப்பட்டுத்தினார். அதனால் தான் இப்போது அவரது இறுதி அஞ்சலிக்கு லட்சக்கணக்கில் மக்கள் திரண்டிருக்கின்றனர். பேனா எப்போதும் என் தாத்தாவை உருவகப்படுத்தும். எனவே இந்த பேனாவை அவர் உடல் தாங்கிய பேழைக்குள் வைக்கப்போகிறேன் என கூறியுள்ளார்.

 

 

இதனை கேட்டு மகிழ்ச்சியடைந்த அதிகாரி, எனக்கு இதைவிட வேறு என்ன பாக்கியம் வேண்டும். இதன் மூலம் கிடைக்கும் சந்தோஷத்தை விட வேறு எதுவும் முக்கியம் இல்லை என தெரிவித்துள்ளார். பின்னர் அந்த அதிகாரி தான் கொடுத்த பேனாவை ஒரு போட்டோ எடுத்துக்கொள்கிறேன் என ஆதித்யாவிடம் கேட்டு கொண்டு படம் பிடித்துள்ளார். இந்த சம்பவம் அங்கு கூடியிருந்தவர்களை நெகிழ்ச்சியடையை செய்தது.

கலைஞரின் சட்டைப் பையில் எப்போதும் ஒட்டிக் கிடப்பது அவர் வழக்கமாகப் பயன்படுத்தும் வேலிட்டி ஏர்மெயில் பேனா மட்டும் தான். பேனா இல்லாமல் எப்போதும் கலைஞர் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்