பஹ்ரைன் நாட்டில் , திமுக சார்பில் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிக் கொண்டாட்டம், கலைஞர் பிறந்த நாளாம் " செம்மொழி தினம்" அதை முன்னிட்டு " செம்மொழி தமிழ்" என்ற நூல் அறிமுக விழா மற்றும் பஹ்ரைன் திமுக வின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா என முப்பெரும் விழாவாக கடந்த வெள்ளிக்கிழமை மாலை பஹ்ரைனில், குதைபியாவில் உள்ள புட் வில்லேஜ் உணவகத்தில் அப்துல் கபூர் அவர்களின் தலைமையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அதில் முதலாவதாக தலைவர் கலைஞர் உருவப் படத்திற்கு சண்முகம்வாசு மாலையிட்டு மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து நூற்றுக்கு மேற்பட்டோர் தலைவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். இரண்டாவதாக செம்மொழி தமிழ் என்ற நூலினை, பாரதி தமிழ் சங்கத்தின் நிறுவனர் முஹம்மது ஹுசைன் மாலிம் அறிமுகம் செய்துவைக்க ருத்திரமூர்த்தி பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பஹ்ரைன் திமுக வின் அவைத்தலைவர் ஆம்பல் குணசேகரன் முதன்மை செயலாளர் சுப்ரமணியன் முத்துசாமி திருமேனி தகரம்பயம் செந்தில், பொய்கை சிங்கமுத்து, காசை லெனின்.சோமு.சண்முகநாதன், தமேல்பூந்தை இஸ்மாயில், அசோக்,சின்னசாமி, களபம் ஜாஹிர், நாஞ்சில் பஷீர். .மன்னை முபாரக் ,.சுல்தான் இப்ராஹிம், மற்றும் மதிமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் , மஜக ஆகிய தோழமை இயக்கங்களின் பிரமுகர்களும், நூற்றுக்கும் மேற்பட்டதமிழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
அது போல் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கடுமையாக உழைத்து பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்று மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்கு உழைத்திட்ட, முரசொலி நிர்வாக மேலாண்மை இயக்குனர் உதயநிதி ஸ்டாலினை கழக இளைஞர் அணி செயலாளராக நியமனம் செய்யவேண்டும் என தலைமை கழகத்தை பஹ்ரைன்நாட்டில் வாழும் திமுகவினர் கேட்டுக் கொள்வதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு இருக்கிறார்கள். அதை தலைவர் ஸ்டாலின் பார்வைக்காக தலைமைக்கும் அனுப்பியுள்ளனர்.
அதுபோல் திமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான "கோவைத் தென்றல்" மு. இராமநாதன் மறைவிற்கும், ஒன்றிணைந்த சென்னையின் கழக மாவட்ட செயலாளராக இருந்த ஆர். டி. சீதாபதி மறைவிற்கும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் சிறுபான்மை அணித் தலைவருமான வசந்தி ஸ்டான்லி மறைவிற்கும், ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.