தி.மு.க தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் மூலை முடுக்கில் உள்ள மாவட்டத்தில் எல்லாம் கட்சி நிர்வாகிகளை அதிரடி மாற்றம் செய்து வருகிறார். ஆனால், அறிவாலயம் அருகே உள்ள திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தை சீர் செய்யாமல் கிடப்பிலேயே போட்டு வைத்துள்ளார் என கூறுகிறார்கள் கிராம கிளை நிர்வாகிகள்.
இந்த மாவட்டத்தில் உள்ள திருத்தணி, கும்முடிபூண்டி, பொன்னேரி ஆகிய 3 தொகுதிகளும் 2001, 2006, 2011, 2016 ஆகிய 4 தேர்தலிலும் தொடர் தோல்வி கண்ட திமுக, இந்த நிலையில் ஸ்டாலின் இப்போதும் கட்சி நிர்வாகிகளை மாற்றம் செய்யவில்லை என்றால் தோல்வியில் வெள்ளிவிழா கொண்டாடும் நிலை ஏற்படும் என புலம்புகிறார்கள் அடிமட்ட தொண்டர்கள்.
போனமுறை மாவட்ட செயலாளராக இருந்த மாதவரம் சுதர்சனம் வசூல் வேட்டை நடத்தி ஒன்றிய நகர பேரூர் செயலாளர்களை நியமித்துவிட்டுபோனார். பிறகு வந்த மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி வேணுவும் அதே ஸ்டைலில் அவர் மகனை வைத்து வசூல் வேட்டை நடத்தி வருகிறார்.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் சீட்டுக்கு பணம் வாங்கிக்கொண்டு சீட்டு கொடுத்ததால் எல்லா யூனியன்களிலும் சோழவரம் மீஞ்சூர் தவிர மற்ற 6ல் தி.மு.க தோற்றுப்போனது.
தற்போது 2021 சட்டமன்ற தேர்தலுக்கு MLA சீட் ஆசைக்காட்டி மாவட்ட செயலாளர் வேணு இப்போதே தொகுதிக்கு 3 பேரை கொம்பு சீவி வசூல் செய்கிறாராம். இனியும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தேர்தலை சந்தித்தால் மாவட்ட செயலாளர் வேணு தலைமையில் ஒட்டுமொத்தமாக விலை பேசி அ.தி.மு.க.விடம் அட்வான்ஸ் வாங்கிவிடுவார்கள் என மாவட்டம் முழுவதும் தொண்டர்கள் புலம்பி வருகின்றனர்.