Skip to main content

''இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலக வேண்டும்'' - அதிமுக தம்பிதுரை பேட்டி 

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

"DMK should withdraw from India alliance" - AIADMK Thambidurai interview

 

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், நேற்று முன்தினம் (09.10.2023) கூடியது. அப்போது காவிரி விவகாரத்தில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவைக் கர்நாடக அரசு நிறைவேற்ற உத்தரவிடக் கோரி, தமிழக அரசு சார்பில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

இதையடுத்து காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 88வது கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது 16 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க தமிழகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை என தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் 16 நாட்களுக்கு நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடக் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில் விவசாய அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் நேற்று டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

 

இந்நிலையில் 'உரிய காவிரி நீரை பெற்றுக் கொடுக்க இந்தியா கூட்டணியில் இருந்து திமுக வெளியே வரவேண்டும்' என அதிமுகவின் தம்பிதுரை தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், 'காவிரி நீரை கர்நாடகா தர வேண்டும் என்று இந்தியா கூட்டணிக்கு திமுக அழுத்தம் தர வேண்டும். உரிய நீரை திறக்க வேண்டும் என கர்நாடக அரசை திமுக வலியுறுத்த வேண்டும். இல்லையெனில் இந்தியா கூட்டணியை விட்டு திமுக விலகி அழுத்தம் கொடுக்க வேண்டும்' என தெரிவித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்