Skip to main content

'பக்தர்கள் மகிழ்ச்சியோடு இருக்கும் ஆட்சி திமுக ஆட்சிதான்'-அமைச்சர் சேகர்பாபு பேட்டி 

Published on 03/02/2025 | Edited on 03/02/2025

 

nn

சென்னையில் கோவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், ''இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஆயிரம் கோடியை தாண்டி உபயதாரர்கள் நிதி மாத்திரம் பெறப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பணிகள் தொடரும். எங்கு பார்த்தாலும் திருக்கோவிலின் மணியோசைகள், தூப தீப ஆராதனைகள், குடமுழுக்குகள், திருப்பணிகள் என்று மகிழ்ச்சி ததும்ப இறையன்பர்கள் மகிழ்ச்சியோடு இருக்கின்ற ஒரு ஆட்சியாக இந்த ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஒருகால பூஜை திட்டத்தில் இருக்கும் திருக்கோவில்கள் கிராமப்புறம் மற்றும் ஆதிதிராவிடர் பகுதியில் இருக்கக்கூடிய திருக்கோவில்கள் என்று 7,500 திருக்கோவில்களுக்கு திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கிராமப்புற கோவில்கள், ஆதிதிராவிடர் பகுதிகளில் இருக்கும் கோவில்களுக்கு ஏற்கனவே ஒரு லட்சம் என்று இருந்த திருப்பணி தொகை என்பது தமிழக முதல்வர் பொறுப்பேற்ற பிறகு இரண்டு லட்சமாக அறிவித்தார். சமீபத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு அதை 2.5 லட்சம் என்று அறிவித்துள்ளார். திருப்பணிகளுடைய ஒரு அரசு என்றால் அது மு.க.ஸ்டாலின் தலைமையில் இருக்கும் அரசு என்பதைப்போல் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறோம்.

அதேபோல் ஒரு கால பூஜை திட்டத்தில் இருக்கும் கோவில்களுக்கு ஏற்கனவே ஒரு லட்சம் ரூபாய் வைப்பு நிதி இருந்தது. அதை 2 லட்சம் ஆக்கிய பெருமையும் தமிழக முதல்வரையே சேரும். 12,994 திருக்கோவில்கள் இருந்தது இன்று 17,000 திருக்கோவிலுக்கு ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் 2 லட்சம் ரூபாய் வழங்கியிருக்கின்றார். அந்த திருக்கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மாதம் தோறும் முதல் முதலாக ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கிய அரசு திமுக அரசு'' என்றார். 

சார்ந்த செய்திகள்