தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அதிமுகவின் வைத்திலிங்கம், கே.பி. முனுசாமி ஆகியோர் அதிமுகவின் வேட்பாளராக களம் இறங்கினார்கள். வெற்றிபெற்றால் அமைச்சர்களாக ஆகிவிடலாம் என்ற எதிர்பார்ப்பில் போட்டியிட்ட அவர்கள், பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார்கள். ஆனால், அதிமுக வெற்றிபெறவில்லை. இதனால் இரண்டு பதவிகளில் ஒன்றை ராஜினமா செய்ய வேண்டிய அவசியம் அவர்கள் இருவருக்கும் ஏற்பட்டது. இதில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இருவரும் ராஜினமா செய்தார்கள்.
இந்நிலையில், காலியாக இருக்கும் அந்த இடங்களுக்கு வரும் 4ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. திமுக சார்பாக வேட்பாளர்களாக கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டிருந்தனர். இதற்கிடையே, முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று (21.09.2021) திமுக வேட்பாளர்கள் இருவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். திமுக வேட்பாளர்கள் இருவரும் போட்டியின்றி நாடாளுமன்றம் செல்ல அதிக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.