Skip to main content

புதிய கல்விக்கொள்கை குறித்து ஆராய திமுக சார்பில் குழு அமைப்பு- திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!

Published on 14/07/2019 | Edited on 14/07/2019

புதிய வரைவு தேசிய கல்விக் கொள்கையை ஆராய்ந்திட திமுக சார்பில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, டாக்டர் ரவீந்திரநாத் உட்பட 8 பேர் ஆய்வுக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு 10 நாட்களில் புதிய கல்வி கொள்கை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஸ்டாலின் அறிவுறுத்தல்.

 

 

 

dmk president mk stalin announced new team new education policy system search

 

 

 

புதிய கல்விக்கொள்கை குறித்த ஆய்வு அறிக்கை கிடைத்தவுடன், திமுக சார்பில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்திடம் அறிக்கை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கல்விக்கொள்கை குறித்து கருத்து தெரிவிக்க பொதுமக்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்டோருக்கு மத்திய அரசு ஜூலை 31 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 


 

சார்ந்த செய்திகள்