குழந்தை சுர்ஜித் மரணம் குறித்து எம்பி டாக்டர் செந்தில்குமார் தனது டிவிட்டில்,
1) 26 அடியில் விழுந்த குழந்தையை மீட்பதற்கான தங்கமான வாய்ப்பு இழக்கப்பட்டுள்ளது.
2) 6 முதல் 8 மணி நேரத்திற்குள் தேசிய, மாநில பேரிடர் மேலாண்மை வீரர்கள் அனைத்து தேவையான உபகரணங்களுடன் நான்கு வகையான திட்டங்களுடன் (plan A B C D) மீட்பு இடத்திற்கு சென்றிருக்க வேண்டும். தாமதம் ஏன்?
3) ஆனால் அவர்கள் சென்றடைய14 முதல் 16 மணி நேரம் ஆனது.
4) திட்டம் செயலிழந்த பிறகுதான் அவர்கள் அடுத்த திட்டத்தை பற்றி சிந்தித்தார்கள்.
5) துறை சார்ந்த நபர்களை தாண்டி அமைச்சர்கள் அங்கு செல்வதை தவிர்த்திருக்கலாம், இது அதிகாரிகளிடையே முடிவு எடுப்பதை சிரம்மப்படுத்தும். பாதுகாப்பு முக்கியம்
6)முக்கியமான பகுதிகள் ஊடக வெளிச்சத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டு இருக்க வேண்டும்.
7) மீட்பு அதிகாரிகளுக்காக குறிப்பிட்ட பகுதிகள் வரையறை செய்யப்பட்டிருக்க வேண்டும். மற்றவர்கள் அங்கு செல்ல தடை செய்யப்பட்டிருக்க வேண்டும்
8) இது உயிரை காப்பாற்றும் விஷயத்தில் மிக முக்கியமானவை என தெரிவித்துள்ளார்.