Published on 07/01/2019 | Edited on 07/01/2019

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. திமுக சார்பில் தமிழகத்தில் உள்ள கிராமங்களில் எல்லாம் ஜனவரி 8-ம் தேதி முதல் கிராம சபைக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் திருவாரூர் இடைத்தேர்தல் அறிவித்ததால் திமுக கிராம சபை கூட்டம் தள்ளிபோனது. இந்த நிலையில் தற்போது திருவாரூர் இடைத்தேர்தல் ரத்தானதை தொடர்ந்து மீண்டும் திட்டமிட்டபடி நாளை முதல் கிராம சபைக் கூட்டத்தை நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. அது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக இன்று மாலை 6 மணிக்கு சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது என தகவல்கள் வந்துள்ளது.