தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படியே திருவாரூரிலும் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் இன்று வெளியிட்டார். மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் - 1001317 உள்ளதாக அறிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் நிர்மல்ராஜ், திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி. மன்னார்குடி ஆகிய நான்கு சட்டமன்ற உள்ளடக்கிய திருவாரூர் மாவட்டத்தின் வாக்காளர் இறுதி பட்டியலை வெளியிட்டார்.
திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் - ஆண் வாக்காளர்கள் - 130716, பெண் வாக்காளர்கள் - 135421, இதர வாக்காளர்கள் - 22, மொத்த வாக்காளர்கள் - 266159.
நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் - ஆண் வாக்காளர்கள் - 130379, பெண் வாக்காளர்கள் - 127991, இதர வாக்காளர்கள் - 7, மொத்த வாக்காளர்கள் - 258377.
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் -ஆண் வாக்காளர்கள் - 113015, பெண் வாக்காளர்கள் - 115652, இதர வாக்காளர்கள் - 1, மொத்த வாக்காளர்கள் - 228668,
மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் -ஆண் வாக்காளர்கள் - 121289, பெண் வாக்காளர்கள் - 126818, இதர வாக்காளர்கள் - 6, மொத்த வாக்காளர்கள் - 248113.
மாவட்டம் முழுவதும் ஆண் வாக்காளர்கள் - 495399 , பெண் வாக்காளர்கள் - 505882, இதர வாக்காளர்கள் - 36, மொத்த வாக்காளர்கள் - 1001317.
"இன்று வெளியிடப்பட்டு உள்ள இறுதி வாக்காளர் பட்டியலே வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளது. எனவே இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்களது பெயர்களை இணைத்துக் கொள்ள விண்ணப்பம் அளித்தால், அது தேர்தல் நேரத்தில் வெளியிடப்படும் துணை வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட வாயப்புகள் இருப்பதாக" அதிகாரிகள் தெரிவித்தனர்.