கடந்த ஜூலை 12-ஆம் தேதி திருப்போரூரில் கோவில் நிலத்தகராறில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக திமுக எம்.எல்.ஏ. இதயவர்மன் உட்பட 11 கைது செய்யப்பட்டனர். முக்கியமாக இதயவர்மன் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த வழக்கில் தி.மு.க எம்.எல்.ஏ இதயவர்மன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் துப்பாக்கி சூடு சம்பவத்தில் தி.மு.க எம்.எல்.ஏ இதயவர்மனுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் சிறையில் உள்ள எம்.எல்.ஏ. இதயவர்மன் உள்ளிட்ட 11 பேருக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையதிற்கு 3 லட்சத்தை நன்கொடையாக அளிக்கவும், வேலூர் காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கு நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. அதேபோல் இதயவர்மனுடன் கைதான 10 பேரும் திருப்போரூர் காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர் குணமடைந்து வீடு திரும்ப, அதன் அடிப்படையில் உயர்நீதிமன்றம் இந்த நிபந்தனை ஜாமீனை வழங்கியுள்ளது.