Published on 31/07/2019 | Edited on 31/07/2019
அத்திவரதரை சயனகோலத்தில் மக்கள் தரிசித்து வந்த நிலையில் தற்போது அத்திவரதரை காண செல்வதற்கான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலின் கிழக்கு கோபுர நடை மூடப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் ஒன்று (நாளை முதல்) அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சிதர இருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளை செய்ய இருப்பதன் காரணமாக தற்போது பொதுதரிசன வழி அடைக்கப்பட்டுள்ளது.

தரிசனத்துக்காக கோவிலுக்குள் சென்றவர்கள் மாலை 5 மணிக்குள் வெளியேற்றப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விஐபி, விவிஐபி தரிசனமும் இன்று மாலை 3 மணிக்குள் முடித்துக்கொள்ளப்பட இருக்கிறது. 31 நாட்கள் சயன கோலத்தில் தரிசனம் தந்த அத்திவரதர் ஆகஸ்ட் ஒன்று முதல் 17 ஆம் தேதி வரை நின்ற கோலத்தில் காட்சிதர இருக்கிறார்.